• Apr 15 2026

விஜய் உடன் கூட்டணியா? முதலில் கல்யாணம் அப்புறமா தான் ஃபர்ஸ்ட் நைட்! நடிகர் மன்சூர் சுடச்சுடப் பதிலடி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பர பரப்பிற்கு பஞ்சமில்லாத நடிகர் தான் மன்சூர் அலிகான். தற்போது அவரும் புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளாராம்.

இவர் தான் ஆரம்பிக்க இருக்கும் புதிய கட்சியின் பதிவு தொடர்பான வேலையின் நடுவில், செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில், நாட்டில் இன்று என்ன நடக்கிறதென்று உங்களுக்கு தெரியும். பதினைந்தாயிரம் இளைஞர்கள் என்னுடன் இணைந்துள்ளனர்.  ஒவ்வொருவருக்கும் வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.


விரைவில் கட்சியை ஆரம்பிக்கவுள்ளோம்.  நாடு தளுவிய ரீதியில் மக்கள் இன்னல்களுக்காக பாடுபடுவோம் என்றார்.

இதன் போது இடையில் பேசிய செய்தியாளர் ஒருவர், கட்சி ஆரம்பித்ததும்  நடிகர் விஜயின் கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா? என கேட்க, 'முதலில் கல்யாணம் ஆகட்டும் பிறகு முதலிரவு பற்றி சிந்திப்போம்' என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement