• Jan 16 2026

''உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்'' பிக் பாஸில் வெளியேறிய விஷ்ணு! மீண்டும் வைரலான வீடியோ! தீவிர ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி  இன்னும் இரண்டு நாட்களில் பைனலுக்கு செல்ல உள்ள நிலையில், தற்போதுள்ளபோட்டியாளர்களுக்கு இடையிலான ஓட்டு விகிதமும் எகிறிக் கொண்டு செல்கிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஷ்ணுவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

குறித்த வீடியோவை ஆர்வமாக பார்த்த ரசிகர்களுக்கு முதலில் ஏமாற்றமே கிடைத்துள்ளது. அதற்குக் காரணம், பிக் பாஸ் வீட்டில் இருந்து இறுதியாக வெளியேறிய விஷ்ணு, தான் வெளியிட்ட வீடியோவில் பிக் பாஸ் தொடர்பான எந்த வித தகவல்களையும் பகிரவில்லை. மாறாக அவர் கூறிய விடயம் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


அதன்படி அவர் கூறுகையில், நான் தான் உங்க விஷ்ணு. எல்லாரும் டிவியை போட்டுட்டு, ஏசிய  போட்டுட்டு நல்லா சாப்பிட்டு டிவி ப்ரோக்ராம் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். 

வீட்டை விட்டு வெளில வாரத்துக்கு வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு வெயில் அடிக்குது. நாம நினைச்சதும் சாப்பிடுறோம், தண்ணி குடிக்கிறோம் அந்த அளவுக்கு வெயிலா இருக்கு. வெளியே இறங்க முடியல..

அதனால நாம வாயில்லாத ஜீவனுக்கு உதவியே ஆகணும். அதனால உங்க வீட்டுக்கு வெளியில கொஞ்சம் தண்ணி வைங்க. அதோட கொஞ்சம் கூட சாப்பாடு வைங்க.. அது புண்ணியம் என சொல்லுகிறார். அதனால உங்களால முடிஞ்ச உதவியை கட்டாயம் பண்ணுங்க என கேட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வீடியோ பழையது என்றும், அதை தற்போது மீண்டும் வைரலாக்கி வருகின்றனர் என்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement