• Sep 28 2025

யோகி பாபுவின் அசுர வளர்ச்சி; முருகன் காலில் ஆசிர்வாதம் பெற்ற மஞ்ச பொக்கிஷம்.?

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்று பலருக்கும்  ஃபேவரைட் ஆன ஒரு நடிகராக மாறி உள்ளார் யோகி பாபு . ஆரம்பத்தில் காமெடியில் கலக்கிய இவர், தற்போது கதாநாயகனாகவும் கலக்கி வருகின்றார் .

நடிகர்  யோகி பாபு முருகனின்  தீவிர பக்தியாளர் ஆவார்.  இவரை சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்டதை விட கோவிலில் தான் பலர் கண்டுள்ளனர்.  அந்த அளவுக்கு முருகன் மீது பக்தி கொண்டவர் யோகி பாபு.

இந்த நிலையில்,  மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார் யோகி பாபு. அங்கு அவர் முருகனிடம் மனமுருகி வேண்டிய காட்சிகள் வைரலாகி உள்ளன.


ஜெயிலர் 2 படத்தின்  ஷூட்டிங் ஒரு பக்கம் போய்க்கொண்டு உள்ளது.  அதில் யோகி பாபு நடித்துக் கொண்டுள்ளார்.  இன்னொரு பக்கம் மருதமலைக்கு சென்ற யோகி பாபு அங்கு மனம் உருகி வேண்டி உள்ளார்.


அதன்படி, நடிகர் யோகி பாபு சொந்தமாக ஒரு படத்தை ப்ரொடியூஸ் பண்ண போகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  அதன்  காரணத்தினாலே மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று படத்தின் கதையை முருகனின் காலில் வைத்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளாராம்.

யோகி பாபுவை கோவிலில் கண்ட மக்கள்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தும் உள்ளனர்.  தற்போது  காமெடியனாக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்த யோகி பாபு, ப்ரொடியூசர் ஆகவும் களம் இறங்கி உள்ளாரா?  என்ற கேள்வி  ரசிகர்களிடம் எழுந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. 




 

Advertisement

Advertisement