தமிழ் சினிமாவில் மகா நடிகராக திகழ்ந்து வருபவர் சத்யராஜ். 70 ஆம் ஆண்டுகளின் இறுதியில் தொடங்கி, இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர கதாபாத்திரமாக பல்வேறு கேரக்டர்களில் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.
தற்போது தனக்கு கிடைக்கும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களிலும் நடித்து வருகின்றார். இவரை உலக அளவில் வெளிக்காட்டிய திரைப்படம் தான் பாகுபலி. இதனால் பான் இந்திய நடிகராகவும் உருவெடுத்து தற்போது தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து வருகின்றார்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கேரக்டரில் நடித்திருக்கும் சத்யராஜ், அரசியலிலும் அவ்வப்போது தலையிடுவார். இறுதியாக இவருடைய நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது. பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், என்னை கேலி செய்தவர்கள் எல்லாரும் என்னுடைய சாதிக்காரர்கள் தான் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சத்யராஜ்.
அதில் அவர் கூறுகையில், என்னுடைய வெற்றிக்கு தடையாக இருந்தவர்களும், என்னை வளர விடாமல் என் ஆர்வத்தை குறைத்தவர்களும் என் சாதிக்காரர்கள் தான். நான் சினிமாவுக்கு வந்த போது என்னால் சாதிக்க முடியாது என என்னை கேலி செய்தவர்களும் என் சாதிக்காரர்கள் தான் என தெரிவித்துள்ளார்.
Listen News!