• Feb 23 2025

காத்துல காதல் பட்டம் விட்ட யோகி பாபுவின் இன்ஸ்டா வீடியோ வைரல்..! செம லவ் மூட்ல இருக்காரே..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் ஜெயம் ரவியின் 33 வது திரைப்படம் ஆக காணப்படுகிறது. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயங்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளதோடு இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உடன் வினய், யோகி பாபு, மனோ, லட்சுமி கிருஷ்ணன், வினோதினி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கியது. இதனால் காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் ரேஸில் இணைந்த படங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு 14ஆம் தேதி வெளியாக உள்ளது.


இந்த நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்த யோகி பாபு தனது இன்ஸ்டா  பக்கத்தில் அதில் இடம்பெற்ற என்னை இழு இழு இழு என இழுக்குதடி.. என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். 


தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றதோடு அதில் யோகிபாபுவின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அசந்து போய் உள்ளனர்.

காமெடி நடிகனாக காணப்படும் யோகி பாபு தற்போது கதாநாயகன் கேரக்டரிலும் களம் இறங்கி வருகின்றார். அதிலும் இவர் நடிப்பில் வெளியான கூர்கா, போர்ட் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. 


தற்போது காதலிக்க நேரமில்லை திரைப்படமும் எதிர்வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், அதில் யோகி பாபுவின் கேரக்டர் எப்படி இருக்க போகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

Advertisement

Advertisement