• Jan 19 2025

வானத்தைப்போல சீரியல் முடிவுக்கு வருதா? கடைசி கிளைமேக்ஸ் இது தான்!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக டெலிகாஸ்ட் ஆகிட்டு வரும் வானத்தைப்போல சீரியல், இப்ப முடிவுக்கு வரப்போகுதாம். 

இந்த சீரியல் எப்ப முடிவுக்கு வரும் , இப்படி ஒரு செய்தி வர என்ன காரணம் என தெளிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல்ல ஒன்னு தான் வானத்தைப்போல சீரியல். இந்த சீரியல் ஒரு ஃபேமிலி டிராமா. இதற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கு. அதனால தான் சூப்பரா ஒளிபரப்பயிட்டு வருது.

சன் டிவி டிஆர்பிலயும் நல்ல ரேட்டிங்ஸ் தான் எடுத்துட்டு வருகின்றது வானத்தைப்போல சீரியல். இதில் ஸ்ரீகுமார் சின்னத்திரை தளபதி மகாநதி சங்கர் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிட்டு வராங்க.


ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீர்னு இப்போ இந்த சீரியல் முடிவுக்கு வரப்போறதா ஒரு அதிர்ச்சியான செய்தி ஒன்று தொடர்ந்து வெளியாகிட்டு இருக்கு.

இது வானத்தைப்போல சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் தான் உருவாக்கி இருக்கு. 

தற்போது வானத்தைப்போல சீரியல் ஓட கிளைமாக்ஸ்ல, இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் துளசிய கண்டுபிடிக்கிற மாதிரியும், பொன்னிய சின்ராசு மன்னிச்சு ஏத்துக்க போற மாதிரியும் தான் இருக்க போகுதாம்.


மேலும், கடைசியில் எல்லோரும் ஒரே குடும்பமா சேர்ந்து இருக்கிற மாதிரி எடுத்து சீரியல்ல முடிக்க போறதா சொல்லப்பட்டு இருக்கு. அது மட்டும் இல்லாம இந்த சீரியலோட கிளைமேக்ஸ் ரொம்பவும்  எமோஷனலாக கொண்டு போய் முடிக்க போறாங்களாம். 

இந்த சீரியல் முடிவுக்கு வர என்ன காரணம்னா, சன் டிவியில் நிறைந்த புது சீரியல் வரப்போறதால கூட இருக்கலாம். அப்படி என்றும் சொல்லி இருக்காங்க.

ஆனா எது எப்படி இருந்தாலும் வானத்தைப்போல சீரியல் முடிவுக்கு வந்தால் கண்டிப்பா பல ரசிகர்கள் ரொம்ப பீல் பண்ணுவாங்க அப்படின்னு தான் சொல்லணும்.

Advertisement

Advertisement