சிம்பு–வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து நடிகர் சிம்பு பேசியுள்ள கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிம்பு, ‘அரசன்’ திரைப்படம் சாதாரணமான படமாக இருக்காது என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், ஹிந்தி சினிமாவில் ‘துரந்தர்’ திரைப்படம் எந்த அளவுக்கு முக்கியமான படமாக அமைந்ததோ, அதேபோல் தமிழ் சினிமாவுக்கு ‘அரசன்’ இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இது சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் அல்ல என்றும், படத்திற்காக சிறு வயது முதல் பல்வேறு வயது தோற்றங்களில் தான் நடித்துள்ளதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இயக்குநர் வெற்றிமாறன் ஒவ்வொரு காட்சியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் முழுமையை எதிர்பார்ப்பவர் என்பதால், படப்பிடிப்புக்காக பல நிஜமான இடங்களை தேர்வு செய்து படமாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் படத்தின் காட்சிகள் மிகவும் இயல்பாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்புவின் இந்த பேச்சு, ‘அரசன்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணையும் முதல் படமாக உருவாகி வருவதால், இப்படம் வெளியாகும் போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Listen News!