தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் பல ஆண்டுகளாக திரைத்துறையில் கதாநாயகியாக நடித்து வருவதுடன் , தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது அவரது வழக்கம். அந்த வகையில், தற்போது தமன்னா பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களில் தமன்னா மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இவை படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இந்த புகைப்படங்களில், அவரது உடை மற்றும் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

குறிப்பாக அவரது கவர்ச்சியான லுக்கை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
புகைப்படங்கள் வெளியான சிறிது நேரத்திலேயே அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றன. ஏற்கனவே தமன்னாவின் ஸ்டைலான புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில், இந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.
Listen News!