பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக பேபி ஜான் வெளியானது. ஆனாலும் இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், ரஜினி என பலருடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் கதாநாயகிகளுக்கு முக்கியம் கொடுக்கும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவை நினைவூட்டும் வகையில் அவர் நடித்த திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்தார் கீர்த்தி சுரேஷ். அதற்காக வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அட்லீ இயற்றி இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்த்துக்களோடு வெளியான இந்த திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது.
இன்னொரு பக்கம் கீர்த்தி சுரேஷ் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக காதலித்த தனது நண்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் கலந்து இருந்தார்கள். முக்கியமாக திரிஷா, விஜய் போன்றோர் நேரடியாகவே கீர்த்தியின் திருமணத்துக்கு சென்று இருந்தனர்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய தாயார் அவரின் திருமணத்தின் போது அணிந்திருந்த சேலையை தான் கீர்த்தியும் தனது திருமணத்தில் கட்டி இருந்தார். இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..,
Listen News!