தமிழ் திரையுலகில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்றாக நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இடையேயான சட்டப்போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்பொழுது இந்த வழக்கு தொடர்பான தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது.
நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக கூறி நடிகர் தனுஷ்10 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கான விசாரணை பல மாதங்களாக நடந்துகொண்டிருந்த நிலையில் அதன் இறுதி விசாரணை குறித்து தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் கூறுகையில் இதன் இறுதி விசாரணை ஏப்ரல் 9ம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் முடிவுகள் தமிழ் திரையுலகில் புதிய சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
மேலும் படம் தயாரித்தவரின் அனுமதி பெறாமல் அதிலிருந்து காட்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது சட்ட விரோதம் என தனுஷ் கூறியதுடன் படத்தின் முழுஉரிமை தனுஷின் தயாரிப்பு நிறுவனத்திற்கே சொந்தமானது, எனவே அதிலிருந்து எந்தக் காட்சிகளையும் பயன்படுத்த முடியாது என்றார். மேலும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பிற்கு அனைத்து ரசிகர்களும் காத்திருக்கின்றார்கள்.
Listen News!