தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பாலும், வலுவான கதாபாத்திரங்களாலும் தனித்த அடையாளம் பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது குடும்ப வாழ்க்கை மற்றும் மத நம்பிக்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்று வருகிறது.

பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் இணைந்து வாழும் இந்திய சமூகத்தில், மத ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் அவரது கருத்துகள் பலரிடமும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளன.
சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், “என் கணவர் இந்து, நான் ரோமன் கத்தோலிக். ஆனா, இந்த 22 வருஷத்தில எங்க வாழ்க்கையில மதத்தைப் பற்றிப் பேச்சு வந்ததே இல்லை.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,“எங்களுக்கு எல்லா சாமியும் ஒன்னு தான். கோவிலுக்குப் போவோம். சர்ச்சுக்குப் போவோம். மசூதிக்கும் போவோம். என் கணவர் இந்துவா இருந்தாலும் என்னை விட அவர் தான் பைபிள் நிறைய படிச்சிருக்காரு. ஜீஸஸ் போட்டோ கூட வீட்ட வரைஞ்சிருக்காரு. எங்க பசங்களுக்கு அவங்க என்ன மதம்னு கேட்டா கூட சொல்லத் தெரியாது. என் பசங்க சைனாகாரன கல்யாணம் பண்ணா கூட சரினு தான் சொல்வோம்." என்றார்.
மதம் என்பது ஒவ்வொருவரின் நம்பிக்கையில் தான் இருக்கிறது என்பதனை இந்தக் கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றது. இந்தக் கருத்து தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!