• Dec 19 2025

ரோகிணியை மாட்டி விட்ட கிரிஷ்.. கடும் அப்செட்டில் விஜயா.! சமாளித்த மனோஜ்..

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ஸ்ருதி ரவியைப் பார்த்து நீ எப்ப பொண்ணுங்க போடுற ட்ரெஸ் எல்லாம் போட ஆரம்பிச்ச என்று கேட்கிறார். அதுக்கு ரவி ட்ரெஸ் மாறிடுச்சு போல அது நீத்துவோட ட்ரெஸ் என்கிறார். அதைக் கேட்ட ஸ்ருதி டென்ஷனோட நீத்துவுக்கு போன் பண்ணி உங்க ட்ரெஸ் ஒன்னு இங்க வந்திருக்கு என்கிறார். மேலும் உங்க ட்ரெஸ்ஸ ரவிகிட்ட கொடுத்து விடுறேன் என்கிறார்.


அதனை அடுத்து ரவி வாஷிங் கொடுத்த இடத்தில ட்ரெஸ் மாறியிருக்கும் இதுக்கு ஏன் டென்ஷன் ஆகுற என்று கேட்கிறார். அதுக்கு ஸ்ருதி உனக்கு தெரியாமல் மாறியிருக்கலாம் ஆனா அவள் வேணும் என்றே தான் செய்திருப்பாள் என்கிறார். மறுபக்கம் மனோஜும் ரோகிணியும் சந்தோசமா ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்ப ரோகிணி கல்யாணி மாதிரி மாறி கிரிஷுக்கு ஸ்கூலில போய் செர்டிபிகேட் எடுத்ததுக்கு தாங்க்ஸ் என்கிறார். அதைக் கேட்ட மனோஜ் அதுதான் நீ சொன்ன மாதிரி கிரிஷ் கூட நல்ல மாதிரி பழகுறன் தானே என்ர பொண்டாட்டி உடம்பில இருந்து போயிடு என்கிறார். அதுக்கு கல்யாணி நான் முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு.. கிரிஷ் உன்னை டாடி என்று சொல்லிக் கூப்பிடனும் என்கிறார்.


மறுநாள் காலையில் கிரிஷ் மனோஜை டாடி என்று கூப்பிடுறதைப் பார்த்த விஜயா இவன் எதுக்காக மனோஜை டாடி என்று கூப்பிடுறான் என கோபப்படுறார். பின் அண்ணாமலை யாரு உன்ன இப்புடி கூப்பிட சொன்னது என்று கேட்கிறார். அதுக்கு கிரிஷ் ரோகிணியை காட்டுறார். அதைப் பார்த்து எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். ஆனா, மனோஜ் அது ரோகிணி சொல்லல வேற ஒராள் தான் சொன்னாங்க கிரிஷ் தப்பா புரிஞ்சுகிட்டான் என்கிறார். மேலும் இதை பெருசாக்க வேணாம் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement