பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி மீனாவைப் பார்த்து என்ர புருஷன் மயில் கிட்ட எவ்வளவு அன்பா நடந்துகிட்டாரு அவரை ஏமாத்துறதுக்கு அவளுக்கு எப்புடி மனசு வந்தது என்று கேட்கிறார். அதுக்கு மீனா ஆமா.. மாமா என்னையும் ராஜியையும் விட மயில் அக்கா மேல ரொம்ப பாசமாத் தான் இருந்தாரு என்கிறார். பின் கோமதி சரவணன் பற்றியும் அவள் தப்பா சொல்லி ஏமாத்தியிருக்கிறாள் என்று கோபமாகச் சொல்லுறார்.

அதனைத் தொடர்ந்து பாண்டியன் நித்திரையா கிடந்த சரவணனைப் பார்த்து அப்பா செய்து வைச்ச கல்யாணத்தால உன்ர வாழ்க்கை இப்புடி ஆகிட்டே என்று சொல்லி கவலைப்படுறார். மறுபக்கம், மயில் சரவணனோட சந்தோசமா இருந்ததை நினைத்துப் பார்த்து அழுது கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த பாக்கியம் நீ புருஷனோட சந்தோசமா இருக்க என்ன செய்யணுமோ அதை நான் செய்துகாட்டுவேன் என்கிறார்.
அதனை அடுத்து மயில் நியாயம் கேட்கணும் என்று சொல்லிட்டு பாண்டியன் வீட்டு வாசலில போய் நிற்கிறார். அதைப் பார்த்த மீனாவும் ராஜியும் ஷாக் ஆகுறார்கள். பின் மீனா மயிலைப் பார்த்து இங்க என்ன செய்யுறீங்க என்று கேட்கிறார். அதைக் கேட்ட மயில் என்னால என்ர அம்மா வீட்ட இருக்க முடியல அதுதான் வந்திட்டன் என்கிறார்.

அதனை அடுத்து கோமதி மயில் கிட்ட வந்து இங்க எதுக்காக வந்தனீ என்று சொல்லிப் பேசுறார். பின் மயிலை வெளியில விட்டு கோமதி கதவை மூடுறார். அதைப் பார்த்த மயில் கதவை திறக்க சொல்லி கத்துறார். இதைத் தொடர்ந்து கோமதி பாக்கியத்துக்கு போன் எடுத்து உங்க பொண்ணைக் கூட்டிக் கொண்டு போங்க என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!