• Dec 19 2025

‘AK 64’ படத்தில் விக்ரம் பிரபு இணைகிறாரா.? அவரே சொன்ன உண்மை.! வைரலான பேட்டி

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் விக்ரம் பிரபு, தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அவர் நடிக்கும் புதிய திரைப்படம் ‘சிறை’ டிசம்பர் 25, 2025 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் செய்தியாளர்களுடன் சந்தித்த விக்ரம் பிரபு, தனது எதிர்பார்ப்பு மற்றும் எதிர்கால திட்டங்களைப் பற்றியும் உரையாடியுள்ளார்.

‘சிறை’ திரைப்படம், விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகும் புதிய முயற்சியாகும். கடந்த காலங்களில் அவர் நடித்த பல திரைப்படங்கள் போல், இந்த படமும் திரையரங்கில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில், தனது தங்கையின் கணவர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அஜித்தின் புதிய படத்தை இயக்கிவருவதைப் பற்றி அவர் உருக்கமாக பேசியுள்ளார். விக்ரம் பிரபு கூறுகையில், “தங்கையின் கணவர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அவர் கேட்டுக் கொண்டால் கெஸ்ட் ரோலில் நடிப்பேன்.” எனத் தெரிவித்தார். இது ரசிகர்களிடையே பரபரப்பான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அதன்படி, ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது இயக்கி வரும் படம் ‘AK 64’ படத்தில் விக்ரம் பிரபு கேமியோ அல்லது கெஸ்ட் ரோல் மூலம் கலந்துகொள்ள தயாராக இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்ட செய்தியாகும். இதுபோன்ற கூட்டணி, தமிழ் சினிமாவில் அரிதான மற்றும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement