• Mar 10 2025

இனிமேல் தான் கச்சேரி ஆரம்பம்..! 13 நாடுகளுக்கு இசை பரப்ப ரெடியாகும் இளையராஜா!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் இசை மன்னனாக காணப்படும் இசைஞானி இளையராஜா, தனது சிம்போனி இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து உலகம் முழுவதும் பரப்பி வருகின்றார். சமீபத்தில் லண்டன் அப்பல்லோ அரங்கில் சிறப்பாக நடத்தப்பட்ட அவரது நிகழ்ச்சி உலகளவில் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

82 வயதாகியும் இன்னும் இசை உலகை ஆளும் இசைப்புயல் தற்பொழுது இசைப் பயணத்துடன் உலகத்தை வலம் வருகிறார். அத்தகைய இளையராஜா ஒரு நேர்காணலில் கூறும்போது "இன்னும் நான் இசைப்பயணத்தை தொடர்வேன் எனக்கூறியுள்ளார். அத்துடன் என் இசைக்காக உலகம் முழுவதும் பயணம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்!" என உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த உலகசுற்றுப்பயண கச்சேரிகள் அவரின் இசை ரசிகர்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அத்துடன் துபாய் , பரிஸ் உள்ளிட்ட13 நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம், அவரது இசை இன்னும் பெரியளவில் ரசிகர்களைக் கவரும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தனது கனவு என்றார். தற்பொழுது இதனை அவருக்கு ஒரு கடமை என நினைத்து செயல்படுகிறேன் எனவும் கூறியுள்ளார். அத்துடன் "நான் எங்கே இருந்தாலும், என் இசையை உலகம் முழுவதும் பரப்பவேண்டும். அது என் உயிரின் ஓசை!" என உணர்வுபூர்வமாகக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement