• Jan 08 2026

ஆரம்பமே அதிரடி.! முன்பதிவில் கெத்துக் காட்டும் "ஜனநாயகன்".. முழுவிபரம் இதோ.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் கடைசி திரைப்படம் என்பதால், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘ஜனநாயகன்’. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மையமாகக் கொண்ட பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ளது.


‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் விஜய்க்கு இது கடைசி திரைப்படம் என்பதால், ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த கவனத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்றைய தினம் வெளியான இரண்டாவது பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பாடல் வைரலாகி வரும் நிலையில், அனிருத்தின் இசை இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான வெளிநாட்டு முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் உள்ள விஜய் ரசிகர்கள் முன்பதிவில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, UK-வில் மட்டும் இதுவரை ரூ.1.3 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழ் சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்பதிவு வசூலாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement