தமிழ் சினிமா ரசிகர்களுக்கு த்ரில்லர் அனுபவத்தை உருவாக்கும் முயற்சியில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள “சிக்மா” படம், தற்போது பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், த்ரில்லர் மற்றும் அதிரடி செயல்பாடுகளின் மசாலா கலவையுடன் சினிமா ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது வெளியான தகவலின்படி, “சிக்மா” படத்தின் டீசர் டிசம்பர் 23ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மூலம் கதையின் சூழல் மற்றும் அதிரடியான காட்சிகள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. இதன் மூலம், தென்னிந்திய சந்தையில் படம் விரிவான வரவேற்பை பெறும் என தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ‘சிக்மா’ திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்து வருவதுடன் இதற்கு தமன் இசையமைத்துள்ளார். அத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நிறைவடைந்துள்ளதாகவும் படக்குழுவினர் வீடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
SIGMA shoot wrapped 🎬✨
Get ready for the Teaser on 23.12.25 at 5 PM.@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt @follow_anbu @yogjapee @Cinemainmygenes @krishnanvasant… pic.twitter.com/aua7GieWwR
Listen News!