மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் குறித்து நாடு முழுவதும் பலரும் நினைவுகூர்ந்து வரும் நிலையில், அவரது மகன் சண்முகபாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த பேட்டியில், தந்தையின் சமூக சேவைகளுக்கும் மனிதநேய செயல்களுக்கும் பின்னால் இருந்த முக்கிய சக்தி குறித்து அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

சண்முகபாண்டியன் பேசுகையில், “எல்லாரும் அப்பா பத்தி மட்டும் தான் பேசுறாங்க. அவர் செய்த உதவிகள், மனிதநேய செயல்கள், அரசியல் பயணம் எல்லாத்தையும் சொல்லுறாங்க. ஆனா இதற்கெல்லாம் முக்கிய காரணமான ஒருவரைப் பற்றி அதிகமாக பேசவே மாட்டேங்குறாங்க.,” என தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
அந்த முக்கிய நபர் வேறு யாருமல்ல, விஜயகாந்தின் வாழ்க்கை துணை பிரேமலதா விஜயகாந்த் தான். தொடர்ந்து பேசிய சண்முகபாண்டியன்,"அம்மா இதுவரைக்கும் அப்பாவை மக்களுக்கு உதவி செய்யாதீங்கன்னு சொன்னதே இல்ல. அப்பாவுக்கு ஒரு முதுகெலும்பா இருந்தது அம்மா தான். அப்பா போனதுக்கு அப்புறம் அம்மா அன்னதானம் போட்டுக் கொண்டிருக்காங்க. " எனத் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் என்ற பெயர் தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு பின்னால், அவரது குடும்பத்தின் ஆதரவும், குறிப்பாக பிரேமலதாவின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது என்பதை சண்முகபாண்டியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Listen News!