பிக் பாஸ் சீசன் 9ல் கலந்துகொண்டு இறுதியாக கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் தான் வியானா. இவர் பேசும் தமிழ் பலரை கவர்ந்தெடுக்கும் வகையில் காணப்பட்டாலும் ஒரு சிலருக்கு இவர் தமிழை கொச்சைப்படுத்துவதாக வெறுப்பும் காணப்பட்டது.
இந்த நிலையில், பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆன வியானா கொடுத்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதன்படி அவர் கூறுகையில்,
நான் உண்மையாகவே எக்ஸ்பர்ட் பண்ணல.. இவ்வளவு பேர் எனக்காக இருக்காங்க என்று.. நான் வெளியில் வந்து பார்த்ததும் நெகட்டிவ் விஷயம் கூட எனக்கு காமெடியா தான் தெரியுது.
அதோட நிறைய பேர் நான் எலிமினேட்ஆனேன் என்று அழுது இருக்காங்க.. அது எல்லாம் எனக்கு புதுசா இருக்கு.. நாம ஷோக்கு தானே போனோம்.. ஆனா ஏன் என்கூட இவ்வளவு கனெக்ட்டா இருக்காங்க என்று நினைக்கத் தோணுது..

ஆனாலும் அது எப்படி ரிசீவ் பண்ணனும் என்றது கூட எனக்கு தெரியல.. நான் என்ன பத்தி யோசிக்கிறதை விட அவங்க என்ன பத்தி ரொம்ப யோசிக்கிறாங்க.. அது எனக்கு சந்தோஷமா இருக்குது ..

மேலும் வீட்டுக்கு வந்ததும் நான் முதல் என் போனை தான் தேடினேன். என்னுடைய பாஸ்வேர்ட் மறந்துவிட்டது. நிறைய பாஸ்வேர்டை மாத்தி மாத்தி போட்டேன்.. வீட்டில் கூட எல்லோரும் உர் என்று கொண்டு இருந்தாங்க.. அதனால நான் போன பார்த்துக் கொண்டிருந்தேன்..
என்கூட அம்மா அதிகமா பேசவில்லை.. வீட்டில் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கிறவர்களுக்குள் அமித்தை தான் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் பிக் பாஸ் டைட்டில் வின்னராக வினோத் வரக்கூடும் என்று சொல்லி உள்ளார்.
Listen News!