• Jan 05 2025

துபாய் கடற்கரையில் ஃபேமிலி போட்டோ ஷூட்! ட்ரெண்டிங்கில் நயன் பகிர்ந்த கிளிக்..!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பின்னர் தனது குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதையே வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் துபாய் கடற்கரையில் எடுத்த கொண்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 


நடிகை நயன்தாரா தற்போது நடிகர் கவினுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் புதுவருடத்தை கொண்டாட நயன்தாரா-விக்னேஷ் சிவனுடன் துபாய்க்கு சென்றிருந்தார். இதுகுறித்த புகைப்படங்களை விக்கி ஏற்கனவே பகிர்ந்திருந்தார். தற்போது துபாய் கடற்கரையில் உயிர்-உலகத்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பதிவொன்றை போட்டுள்ளார். 


அந்த பதிவில் "காதல்,சிரிப்பு, குடும்ப ஆசீர்வாதங்கள் எல்லாத்துக்கும் நன்றி. திருப்திகரமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை. இனிய புதுவருட வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement