ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது என அண்மையில் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால், படக்குழுவிடம் இருந்து கிடைக்கும் தகவலின்படி, இன்னும் சில முக்கிய காட்சிகள் முடிவடையவில்லை என்று தெரிவிக்கின்றனர். குறிப்பாக நடிகை திரிஷாவின் சில காட்சிகள் இன்னும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அஜித்திற்கும் இன்னும் ஒரு நாள் ஷூட்டிங் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'குட் பேட் அக்லி' ஒரு ஆக்சன் மற்றும் த்ரில்லர் கதையம்சத்தைக் கொண்ட படம். இதில் அஜித் தனித்துவமான வேடத்தில் தோன்றுவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் திரிஷா இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.
'குட் பேட் அக்லி' படம் தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரமாண்டமான திரைப்படம் . இது ஏப்ரல் மாதம் 10ம் திகதி வெளியாக உள்ள நிலையில் தற்பொழுது ஷூட்டிங் இன்னும் முடியவில்லை என்று கூறியது ரசிகர்களை ஷாக் அடைய வைத்துள்ளது. எனினும் அஜித் மற்றும் திரிஷாவின் இணைப்பு அனைத்தும் ரசிகர்களையும் வெகுவாகக் கவரும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
Listen News!