விஜயகாந்த் கடந்த 26ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் மூச்சுத் திணறல் காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தார்.இவருடைய உடலுக்கு பொதுமக்கள், திரையுலகினர், கலைத் துறையினர் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இவரது இறுதி ஊர்வலம் மதியம் 1 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது வரை மெதுமெதுவாக கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.இந்த ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கேப்டன், கேப்டன், விஜயகாந்த் என தமிழ்நாடே 2 நாட்களாக புலம்பி வருகிறது. கோடான கோடி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என விஜயகாந்தை கடைசியாக காண வந்துகொண்டே இருக்கிறார்கள்.
அவரின் மறைவு செய்தி வெளியானதில் இருந்து இதற்கு முன் விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்கள் குறித்து நிறைய தகவல்கள் வருகின்றன. நடிகர் வடிவேலு தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கேப்டன் விஜயகாந்த் பற்றி தரக்குறைவாக பேசிய விஷயம் நாம் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் இதனை கேள்விப்பட்ட விஜயகாந்த், வடிவேலு மீது கோபமே படவில்லை, அதற்கு மாறாக யாரும் வடிவேலுவை தரக்குறைவாக பேச வேண்டாம் என பிரச்சார நேரத்திலேயே அனைவரிடமும் கூறி இருக்கிறார்.
அத்தோடு தேர்தலுக்கு பின் வடிவேலு நடிக்காமல் இருந்த போது விஜயகாந்த் அவர்களே நிறைய தயாரிப்பாளர்களிடம் அவரை நடிக்க வைக்க கூறி ரெக்கமெண்ட் செய்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களை பெரிதும் நெகிழ வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!