• Jan 19 2025

நான் ஒரு குரூப்பை நம்பி ஏமாந்துவிட்டேன்... ஓகே ஆகுறதுக்கு 2 நாளாச்சி... பொய்யா இருக்குறது இவங்க 2 பேர் தான்- சரவண விக்ரம் பேட்டி

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சி தற்போது முடிவடையும்  கட்டத்தை   எட்டியுள்ளது . இந்தபோட்டியில் பங்குபற்றிய சரவணன் விக்ரம்  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிய வான்ஹ பிறகு நடைபெற்ற முதல் நேர்காணலில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், போட்டியாளர்கள் பற்றியும் இவ்வாறு கூறியுள்ளார். 


எல்லோருக்கும் முதலாவது நன்றிகள்  இத்தனை நாட்கள் நான் உள்ள இருந்ததற்கு உங்கள் சப்போட் மட்டுமே காரணம். வெளிய வந்து பார்த்த பிறகு தான் தெரியும் இவ்வளவு சப்போர்ட் பண்ணி இருக்கீங்க என்று ரொம்ப சந்தோசம் . 


பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய வந்த பிறகு 2 நாள் ஒரு மாறியாவே இருந்திச்சி . நான் எதிர்பார்காத ஒரு விஷயம் நடந்திச்சி மேடையில பேசும் போது கூட நான் அதை தான் சொல்லிட்டு வந்தன் . வெளிய வந்து நான் டைட்டில் வின்னர் இல்ல  என்று சொல்லி நான் ஓகே ஆகவே 2 நாள் எடுத்திச்சி .  


அப்புறம் மக்களின் வரவேற்பை பார்க்கும் போது என்னைய பற்றி நல்ல அபிப்பிராயம் இருக்கும் போது ஓகே இதுவே ஒரு பெரிய வெற்றி தான் என்று ஓகே ஆகிட்டன். பிக் பாஸ் வீட்டில் உண்மையா இருக்கிறது யார் என்று தெரியல நான் ஒரு குரூப்ப நம்பி ஏமாந்திட்டன். 


பிக் பாஸ் வீட்டில பொய்யாக இருக்கிறது என்றால் அது விஷ்ணு தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் . மற்றும் தினேஷ் விளையாட்டுக்காக தன்னை மாற்றி கொள்கிறார். அது அப்பிடியே வெளிப்படையாக விளங்குது . அர்ச்சனாக்கும் எனக்கும் நல்ல பாண்டிங் இருக்கு , அப்பிடி வேற யாரும் பொய்யாக இருக்காங்க என்று தோணல .


வெளிய வந்ததுக்கு அப்புறம் நான் இன்னும் எந்த அத்தியாயமும் பார்க்கல ,சின்ன சின்ன ப்ரோமோ ,மீம்ஸ் அதுகள் மட்டும் தான்  பார்த்தன் . பிக் பாஸ் வீட்டில ஸ்ட்ராங் ஆன  போட்டியாளர் என்றால் விஜய் வர்மா தான் அமைதியான  ஸ்ட்ராங் போட்டியாளர். மற்றும் விசித்திரா அம்மா ஒரு ஸ்டார்ங் போட்டியாளர் என்று யாருமே நினைக்கல நானும் தான் எதிர்பார்கவே இல்லை. அவங்க உண்மையிலேயே ஒரு ஸ்ட்ராங் போட்டியாளர் தான் என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement