• Jan 19 2025

டைட்டில் வின்னர் இவங்கதான்... சரவண விக்ரம் என்ற பெயர் இப்ப இப்படி மாறிவிட்டது...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீடு பற்றியும், போட்டியாளர்கள் பற்றியும் கூறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சரவண விக்ரம் பிக் பாஸ் தொடர்பான சுவாரஷ்யமான விடையங்களை கூறியுள்ளார்.  


பிக் பாஸ் வீட்டில் இறுதி போட்டியாளர் 5 பெயரிலே முக்கியமா விஜய் வர்மா இருப்பாரு தினேஷ் இருப்பாரு என்று தோணுது , அர்ச்சனா இருப்பாங்க சில நேரம் மணி இருக்க வாய்ப்பு இருக்கு . மாயா, பூர்ணிமா , நிக்சன் இந்த 3 பெயர்ல யாராவது வருவாங்க கண்டிப்பா .


நான் செய்யிற விஷயம் வெளிய காட்ட மாட்டாங்க என்று நினைச்சன் ஆனா காட்டிட்டாங்க. டைட்டில் வின் பண்ணின மாறியே நினைச்சி இருந்தன் ஆனா அது நடக்கல கேமரா முன்னாடி நான் தான் டைட்டில் வின்னர் என்று சொன்னன் அது இவ்வளவு வைரலாகும் என்று நினைக்கல ஆனா ஆகிட்டு 


கப் தான் தூக்க முடியல அந்த பெயராவது கிடைச்சுதே என்று சந்தோசபடுறேன். நான் வாக்கிங் போகும் போது ரசிகர்கள் வந்து எங்களுக்கு நீங்க தான் டைட்டில் வின்னர் என்று சொன்னாங்க . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்திச்சி .


எனக்கு பிக் பாஸ்ல பிடிச்ச போட்டியாளர் என்றா அக்சயா தான். நல்ல பாண்டிங் இருந்திச்சி ரொம்ப நல்ல பொண்ணு அவ அண்ணன் தங்கச்சி மாறி இருந்தம். ஜோவிகா ,அக்சயா 2 பேரையும் ரொம்ப பிடிக்கும் . பிடிக்காது ஒதுக்கணும் என்று சொல்லி யாரையும் நினைக்கல . எல்லாரையும் பிடிக்கும். 


இப்ப நடந்து கொண்டு இருக்கிற டாஸ்க் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்ப நான் வெளியில இருந்து பார்க்கும் போது நான் இல்லையே என்று ஒரு கவலை அவ்வளவுதான் . இப்ப திரைபடங்களுக்கு முயற்சி செஞ்சி கொண்டு இருக்கன். இவ்வாறு வெளிப்படையாக சரவணன் விக்கிரம் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement