• Jan 18 2025

SJ சூர்யாவுக்கு திடீரென என்னாச்சு? நான்கு நாளாக படுமோசமான உடல் நிலை குறைவாம்..!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் எனப்படும் எஸ். ஜே. சூர்யா, இயக்குநராக மட்டுமல்லாது நடிகராக  பட்டையை கிளப்பி வருகின்றார் . இவர் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் இயல்பு கொண்டவராவார்.

இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வாலி மற்றும் குஷி ஆகிய படங்கள் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து அன்பே ஆருயிரே, மகாநடிகன்,கள்வனின் காதலி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். இருப்பினும் அவ்வளவு வெற்றி வாய்ப்பினை வழங்கவில்லை. 

இதனால் சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த சூர்யா மீண்டும் வில்லனாக நடிக்கத்தொடங்கினார்.

அதன்பிறகு இறுதியாக அவர் நடிப்பில் வெளியான, மார்க் அன்டனி, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் போன்ற திரைப்படங்கள் வேற லெவலில் பட்டையை கிளப்பி இருந்தது.

இந்த நிலையில், தற்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாம்.


அதாவது நடிகர் பாபி சிம்பாவின் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொள்ள முடியாமல் போய் உள்ளதாம் எஸ்.ஜே. சூர்யாவுக்கு.

ரஜாக்கார் படத்தின் டெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்று உள்ளது. அதில் சிறப்பு அழைப்பினராக  எஸ்.ஜே. சூர்யா அழைக்கப்பட்ட நிலையில், தனக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் தன்னால் வர முடியவில்லை என குறிப்பிட்டு உள்ளார்  எஸ்.ஜே. சூர்யா.

தற்போது, இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.ஆனாலும் அவர் விரைவில் உடல்நலம் பெற்று வர ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.

இதேவேளை,இன்றைய தினம் அவர் பதிவிட்ட எக்ஸ் தளப் பதிவில், காய்ச்சலின் நான்காவது நாளான இன்று கொஞ்சம் உடல்நலம் மேம்பட்டுள்ளதாகவும், தன் மீது அன்பு செலுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.






Advertisement

Advertisement