• Jan 19 2025

சினிமாவில் நடிக்க சான்ஸ் தருவதாக பணமோசடி! பிரபல நடிகை வழங்கிய போலீஸ் புகார்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

2005-ஆம் ஆண்டு வெளியான 'பிரினீதா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். 

இதன் பின்னர் 'பா', 'கஹானி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 

மேலும் இப்படத்தினையடுத்து நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் தான் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார்.


தமிழ் சினிமாவில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த  நடிகை வித்யா பாலன், ஹிந்தி படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி இருக்கும் நபர் ஒருவர், பலரிடம் பணம் கேட்டு மோசடி செய்திருப்பதாக பொலிஸ் புகார் அளித்துள்ளார்.

அத்துடன், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக அந்த நபர் பலரிடம் மோசடியாக பணம் வாங்கி ஏமாற்றியிருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

Advertisement

Advertisement