விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9-ல் நடந்துவரும் சில செயல்கள் அந்த எதிர்பார்ப்புகளை நொறுக்கிவிட்டன. குறிப்பாக, போட்டியாளர்களான சபரி, கம்ருதீன், துஷார் உள்ளிட்ட ஆண்கள் இடையே நடைபெறும் காட்சிகள், தற்போது சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

இந்த சீசன் தொடங்கியதிலிருந்து இன்றுவரை நிகழ்ச்சியில் வன்மையான டாஸ்க்குகள், உணர்ச்சிபூர்வமான உரையாடல்கள் என்று எதுவுமே இல்லை என ரசிகர்கள் வருத்தமாக உள்ளார்கள்.

இந்நிலையில் சமீபத்திய எபிசொட்டில், சபரி, கம்ருதீன் மற்றும் துஷார் மாறி மாறி ஒருவரையொருவர் முத்தமிடும் காட்சிகள் ஒளிபரப்பானது. இதனைப் பார்த்த ரசிகர்கள் "இது வேடிக்கையாக அல்ல, எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது." எனக் கூறியுள்ளனர்.
அவர்கள் நட்புக்காக இப்படிச் செய்திருக்கலாம் என்றாலும், அதை இந்தளவுக்கு காட்சிப்படுத்த வேண்டுமா என மக்கள் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். அத்துடன், "இது என்ன வீடு" எனவும் ரசிகர்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.
Listen News!