• Feb 19 2025

இப்ப மனசு மாறி என்ன பண்றது ஈஸ்வரி.? ராதிகாவுக்கு பாக்யா சொன்ன கடைசி வார்த்தை

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், ராதிகா கோபி வீட்டில் இருந்து கிளம்பும்போது ஈஸ்வரிடம் ஆசீர்வாதம் வாங்குகின்றார். இதன்போது ஈஸ்வரி மனம் உருகி நீயும் மையூவும் நன்றாக இருக்க வேண்டும், மையூ பெரிய பிள்ளை ஆனால், அவளுடைய கல்யாணத்துக்கு எல்லாம் சொல்லி அனுப்பு கட்டாயம் நான் வருவேன் என்று அவருக்கு சாரி ஒன்றையும் கிப்டாக கொடுக்கிறார்.

மையூக்கு பாக்கியாவும் உணவுப்பொருட்களை கொடுக்குமாறு கொடுக்கின்றார். மேலும் உங்களுக்கு ஒரு அக்காவா மையூவுக்கு ஒரு பெரியம்மாவா நான் இங்க எப்பயும் இருப்பேன் என்று சொல்ல, ராதிகா நீங்க எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணி இருக்கீங்க அதுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை என்று எமோஷனலாக பேசுகின்றார்.

அதன் பின்பு ராதிகா அனைவரிடமிருந்தும் விடை பெற்று  சொல்லுகின்றார். இதனால் கோபி மணமடைந்து ரூமுக்குச் செல்ல, அங்கிருந்த ஈஸ்வரி நான் நிறைய தப்பு பண்ணிட்டேன். கோபி உன்னை மரியாதை இல்லாமல் நடத்திய போதே நான் அவனை கண்டித்து இருக்கணும். 


ஆனால் நானும் உன்னை மட்டம் தட்டி பேசிட்டேன் ராதிகா கூடவும் அவனை நிம்மதியாக வாழ விடவில்லை இப்போ என்னுடைய பையன்  தனி மரமாக நிற்கின்றான் என்று வருத்தப்பட்டு பேசுகின்றார்.

இன்னொரு பக்கம் இனியா அவருடைய காதலருடன் காபி ஷாப்பில் இருக்கின்றார். இதன் போது அவரும் ராதிகாவை பற்றி வருத்தம் தெரிவிக்கின்றார். மேலும் இனியாவின் காதலர் உங்களுடைய வீட்டில் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்று கேட்க, கட்டாயம் உன்னை ஏற்றுக் கொள்வார்கள் நீ கலெக்டர் ஆகப் போகிறாய் தானே என்று நம்பிக்கை கொடுக்கின்றார்.

இறுதியில் பாக்கியாவை பார்க்க எழில் வருகின்றார் மேலும் பாக்கியா புதிய ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க உள்ளதை பற்றி கேட்க, எல்லா  அரேஞ்ச்மெண்ட்டும் சரி பேப்பருக்கும் பிரெண்ட்ஸ் கூட கொடுத்தாச்சு என்று சொல்ல கோபி  பாக்கியாவை வியந்து பார்க்கின்றார்.

Advertisement

Advertisement