• Feb 21 2025

'பராசக்தி' வீடியோவுடன் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன பெண் இயக்குநர்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் இன்றைய தினம் தனது  40வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.  இதனால் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருவதோடு அவர் நடித்து வரும் படங்கள் தொடர்பான அப்டேட்டுக்களையும்  படக் குழுவினர் வாரி வழங்க தயாராகி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் தற்போது தனது 23, 24 மற்றும் 25வது படங்களில் நடித்து வருகின்றார். நேற்றைய தினம் சிவகார்த்திகேயனின் 23 வது படம் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதற்கான டைட்டிலும் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 வது படமான 'பராசக்தி' படத்தின் இயக்குநர் சுதா கொங்காரா  சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்கள். இந்த படம் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ்க்கு  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25ஆவது படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் ஆண்டனி அது தனக்குரியது என சொந்தம் கொண்டாடினார். அதேபோல இந்த படத்தின் டைட்டில் சிவாஜி உடையது என சிவாஜியின் ரசிகர்களும் எதிர்த்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement