ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நடிகர் சிறிக்கோவுக்கு திரைத்துறையினர் நிதியுதவி வழங்கி உதவி செய்துள்ளனர்.
தமிழ் திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக துணை நடிகராகவும், நகைச்சுவை வேடங்களில் சிறப்பாக நடித்தும், திரையுலகில் தனித்துவமான இடத்தை பிடித்த நடிகர் சிறிக்கோ, வயதான காரணத்தால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிறிக்கோவின் சிகிச்சைக்காக திரைத்துறையினர், குறிப்பாக சினிமா பிரபலங்கள் அவருக்கு உதவியாக நிதி சேகரித்துள்ளனர். அவருக்கு நிதி உதவியாக கிங்காங் , முத்துக்காளை ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
இதனை நடிகர்கள், ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சினிமா துறையில் பணிபுரிந்தவர்கள், அவர்களின் வாழ்க்கை காலத்தில் சந்திக்கும் சிக்கல்களுக்கு திரைத்துறையினர் இணைந்து உதவி செய்ய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறிக்கோ தமிழ் சினிமாவில் பல பிரபலமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக காமெடி கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!