• Dec 04 2023

சரிகமப பாடகர் பிரகாஷ்க்கு நேர்ந்த கொடுமை..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான சரிகமப சீசன் இரண்டில் பங்கேற்ற பிரபல பாடகரான பிரகாஷ் மீது கடந்த தீபாவளி தினத்தில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, 26 வயதான சரிகமபா பாடகர் பிரகாஷ் தீபாவளி தினத்தன்று பட்டாசு வாங்குவதற்காக தன் உறவினரோடு வெளியே சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் பக்கத்து ஊரை சார்ந்த மாற்று சமூகத்தினர் வழிமறித்த சிலர் சாதிய தீண்டாமை வார்த்தைகளில் பேசி பீர் பாட்டிலால் தலையில் 15 முறை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.


மேலும், பிரகாஷின் சொந்த ஊரு புதுக்கோட்டை மாவட்டம் ஆயிப்பட்டி. இந்த கிராமத்தில் அண்ணா நகரை சேர்ந்தவர் தானாம். பிரகாஷின் தந்தை அவர்  எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாற்று சமூகத்தினர் கல் எடுத்து எரிந்ததில் மரணம் அடைந்து விட்டார் என்று பேட்டி ஒன்றில் பிரகாஷ் கூறி இருக்கிறார்.அதற்கு பிறகு தன்னுடைய தாய்தான் தன்னை வளர்த்து வந்தார் என்று அந்த பேட்டியில் பிரகாஷ் கூறியிருக்கிறார்.


மேலும், விவசாய குடும்பத்தை சார்ந்த பிரகாஷ் தன்னுடைய பாட்டு திறமையின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு பாடகராக மாறி இருக்கிறார்.

இவ்வாறான நிலையிலேயே, தீபாவளி தினத்தன்று இரண்டு நபர்கள் பிரகாஷ் உடைய சாதியை சொல்லி திட்டி அவர்கள் மீது கற்களை வீசி தாக்கியதாகவும் பீர் பாட்டில்களால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த பிரகாஷ், 14ம் திகதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருடைய வீடியோ வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement