• Jan 15 2026

புஸ்வானமாக போன பழனியின் காதல்.. ராதிகா வீட்டில் நடந்த விபரீதம்? பாக்கியா கொடுத்த அட்வைஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பழனியும் பாக்கியாவும் காரில் வந்து கொண்டிருக்க பாக்கியா பழனியிடம் தன்னை ஒருவர் பொண்ணு கேட்டு வந்தால் என்ன செய்வது என்று கேட்டு, தனது நிலைமையை புரிய வைக்கிறார். இதனால் பழனி இறுதியில் தனது ஆசையை விட்டு இறுதிவரை பாக்கியாவுடன் நட்பாக இருப்போம் என முடிவெடுக்கின்றார். பாக்கியாவும் பழனிக்கு அப்படியொரு எண்ணம் இல்லை என புரிந்து கொள்கிறார்.

இதை தொடர்ந்து ராதிகா ஸ்கேன் பண்ண போவதற்காக கோபிக்கு போன் பண்ண, அவர் டைம்க்கு சரியாக வருவதாக சொல்லுகிறார். இதன் போது கமலா ஈஸ்வரிடம் வேண்டுமென்றே வம்பு இழுக்க, ஈஸ்வரி உன்னோட கதைக்க முடியாது என அமைதியாக விலகிப் போகிறார்.

மறுபக்கம் பாக்கியா இனியாவுடன் கதைக்க வேண்டும் என்று இனியாவிடம் காலேஜில் நடந்த விஷயங்களை பற்றி கேட்கிறார். அதற்கு பிறகு விமலை சந்தித்தியா? உங்க அப்பா சொன்னாரு  என்று கேட்க, அவர் அப்பாவுடன் சென்றபோது விமலை சந்தித்த கதை பற்றி கூறுகின்றார். இதன் போது இனியாவுக்கு அட்வைஸ் பண்ணுகிறார் பாக்யா.


இதை தொடர்ந்து ராதிகா ஹாஸ்பிடல் போவதற்காக ரெடியாகிவிட்டு கிச்சனில் தண்ணீர் பாட்டில் எடுக்க செல்கின்றார். எடுத்துவிட்டு மீண்டும் வரும்போது காலில் பூவாஸ் தடுக்கி கீழே விழுந்து விடுகிறார். இதன் போது பின்னால் நின்ற ஈஸ்வரி அதிர்ச்சி அடைகின்றார்.

இதை பார்த்து கமலாவும் பதறி அடித்துக் கொண்டு கோபிக்கு போன் பண்ணி வர வைக்கின்றார். கோபி வந்ததும் ராதிகாவை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்ல, குழந்தைக்கும்  ராதிகாவுக்கும் எதுவும் ஆகக்கூடாது என்று ஈஸ்வரி வேண்டிக் கொள்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement