• Nov 25 2024

ராஜமௌலி படத்தில் நடிக்க மறுத்த த்ரிஷா? ‘பாகுபலி’ படத்தின் மூலம் கொடுத்த பதிலடி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஒரு படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷா மறுத்துவிட்டதை அடுத்து ’பாகுபலி’ படத்தின் மூலம் த்ரிஷாவுக்கு ராஜமெளலி  பதிலடி கொடுத்துள்ளதாக தெலுங்கு திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2001ஆம் ஆண்டு ’ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக ராஜமெளலி அறிமுகம் ஆகி அதன் பிறகு பல திரைப்படங்கள் இயக்கினார். குறிப்பாக ’மகதீரா’ என்ற படம் சூப்பர் ஹிட் ஆகியது.

இதனை அடுத்து அவர் தெலுங்கு காமெடி நடிகர் சுனிலை ஹீரோவாக்கி ’மர்யதா ராமண்ணா’ என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் ராஜமெளலி பேச்சுவார்த்தை நடத்திய போது காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என த்ரிஷா மறுத்து விட்டதாகவும் வேறு ஹீரோ நடித்தால் ஓகே என்று சொன்னதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சுனில் தான் ஹீரோ என்பதை முடிவு செய்த ராஜமெளலி  அந்த படத்தை வேறொரு நாயகியை வைத்து எடுத்தார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’நான் ஈ’ என்ற வெற்றி படத்தை இயக்கிய ராஜமெளலி ’பாகுபலி’ படத்தை ஆரம்பித்தபோது அனுஷ்கா நடித்த கேரக்டரில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாம் என்று அவருடைய உதவியாளர்கள் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் த்ரிஷா வேண்டாம் என்று ராஜமௌலி முடிவெடுத்து விட்டதாகவும் தன்னுடைய படத்தில் நடிக்க முடியாது என்ற த்ரிஷாவுக்கு பதிலடி கொடுத்ததாகவும் அதன் பிறகு தான் அனுஷ்கா இந்த படத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இனி வரும் படங்களிலும் த்ரிஷாவை வைத்து ராஜமெளலி படம் எடுக்க வாய்ப்பு இல்லை என்று தெலுங்கு திரையுலகில் கூறப்பட்டு வருகிறது. 

Advertisement

Advertisement