சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சொத்தை பிரித்து கொடுப்பதற்காக வக்கீலை அழைத்து வருகின்றார் பரணி. ஆனால் அங்கு சொத்தை பிரிக்க வேண்டாம் என்று முத்து, ரவி கூற, சொத்தை பிரிக்க வேண்டும் என்று மனோஜ் கூறுகின்றார்.
இதனால் சண்டை வலுக்கின்றது. இதை பார்த்த வக்கீல் நீங்க எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க, அதுக்கப்புறம் சொத்தை பிரிக்கலாம் என்று கிளம்பிச் செல்கின்றார். இதனால் அண்ணாமலை மனம் உடைந்து போகின்றார்.
இதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் அண்ணாமலையை காணவில்லை என எல்லாரும் தேடுகின்றார்கள். மீனா சாமி அறையில் இருந்து கடிதம் ஒன்றை எடுக்கின்றார். அதில் எல்லோரும் என்னை தேடுவீங்க என்று தெரியும். நான் டைம் வரும்போது வருகின்றேன் என்று எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார் அண்ணாமலை.
இதை பார்த்து எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.மேலும் எல்லாரும் அண்ணாமலையை தேடி அலைகின்றார்கள். விஜயாவும் அண்ணாமலை இல்லை என்றால் நானும் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் அவரை தேடி கண்டுபிடிக்குமாறு சொல்லுகின்றார்.
எனினும் மனோஜ் தனக்கு சொத்து எழுதி தரக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணாமலை கிளம்பிச் சென்றுள்ளதாகவும், இது எல்லாவற்றிற்கும் காரணம் ரோகிணி தான் என்றும் பேசுகின்றார். அந்த பெரிய ஆர்டரை எடுக்கவில்லை என்றால் நான் கடன் வாங்கி இருக்க தேவை இல்லை என்று ரோகிணிக்கு திட்டுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!