• Jan 18 2025

எழிலுக்கு தெரியாமல் அமிர்தா செய்த காரியம்! ஈஸ்வரியை புரட்டி எடுத்த சொந்தங்கள்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராமமூர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக எல்லாரும் கோவிலுக்கு கிளம்பி செல்கின்றார்கள். அங்கு தடபுடலாக ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்த்து ராமமூர்த்தி சந்தோஷப்படுகிறார்.

இன்னொரு பக்கம் கோபி இவர்கள் எங்கே கிளம்பி சென்றார்கள் என்று தெரியாமல் புலம்பி கொண்டு இருக்கின்றார். இதனை ராதிகா பார்த்தும் பார்க்காதது போல் இருக்கின்றார். அந்த நேரத்தில் செழியனுக்கு போன் பண்ணவும் அவர் போனை ஆன்சர் பண்ணவில்லை.

மறுபக்கம் அமிர்தா தனியாக கடைக்குச் சென்று தாத்தாவுக்கு வாட்ச் ஒன்றை வாங்கி வர, எழில் ஏன் தன்னிடம் சொல்லவில்லை உனக்கு எப்படி காசு வந்தது என விசாரிக்கின்றார். அதற்கு அமிர்தா தான் காசு சேர்த்து வைத்ததாக சொல்ல, எழில்  நம்பவில்லை உண்மையை சொல்லுமாறு சொல்ல, அவர் தனது மோதிரத்தை அடகு வைத்து வாங்கியதாக சொல்கின்றார். இதனால் கோபப்பட்ட எழில் வாட்ச்சை கொடுத்து மீண்டும் மோதிரத்தை திருப்ப வருமாறு பேசுகின்றார். ஆனாலும் அமிர்தா தாத்தாவின் பிறந்தநாளுக்கு சென்று வருமாறு சொல்லுகின்றார்.


இதை தொடர்ந்து ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வர பழனிச்சாமியும் வந்து அவருக்கு பர்த்டே கிஃப்ட் கொடுக்கின்றார். அத்துடன் அங்கு வந்தவர்களில் இருவர் கோபி எங்கே காணவில்லை என விசாரிக்க, ஈஸ்வரி எனக்கு மகன் இல்லை பொண்ணு தான் இருக்கா என பாக்கியாவை காட்டி கதைக்க  அவர்கள் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படி என்றால் எழில் எங்கே? அவரது பொண்டாட்டி பிள்ளை எங்கே என கேள்வி கேட்க, அங்கே இருந்த ஜெனி வந்தீங்களா சாப்பிட்டீங்களா என்று இருங்க என்று அவர்களை அனுப்பி வைக்கின்றார். அதன் பின்பு செழியன் பாக்கியாவிடம் சென்று எழிலை கூப்பிடுமாறு சொல்ல, அவன் கண்டிப்பாக வருவார் என பாக்கியா சொல்கின்றார்.

இறுதியாக ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் மாலை மாற்றிக் கொள்ளும் நேரத்தில் எழிலும் அமிர்தாவும் வந்துவிடுகிறார்கள். இதை பார்த்து ராமமூர்த்தியும் பாக்கியாவும் கண்கலங்குகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement