• Jan 19 2025

காதல் கணவரோடு க்யூட் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா.. மார்னிங் வைப் போட்டோஸ் இதோ..

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் பல ஆண்டு காலமாக சினிமா துறையில்  தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துள்ளார்.

இவர் சினிமா வாழ்க்கையில் எவ்வாறு பெயரும் புகழோடும் காணப்படுகின்றாரோ அதுபோலவே தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் சிறப்பாக காணப்படுகின்றார். அவர்களுடன் நேரம் செலவழிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

நடிகை நயன்தாரா தற்போது நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பிற்காக வெளியூரில் தங்கி உள்ளார். அதற்காக இயற்கையின் எழில் சூழ்ந்த ஹோட்டல் ஒன்றில் நயன்தாராவும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது இயற்கையை ரசித்தால் போல தனது கணவன், குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.


குறித்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் காதலோடு கை கோர்த்து காலைப் பொழுதை என்ஜாய் பண்ணுவது போல தெரிகின்றது. அவர்களுக்குள் இருக்கும் காதலும் நெருக்கமும் அவர்களுடைய முகத்தில் பிரதிபலிக்கும் புன்னகையை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகின்றது.

மேலும் நயன் - விக்கியின் குழந்தைகளான உயிர் - உலகம் இருவரும் கியூட்டான நீளம் மற்றும் வெள்ளை நிறத்திலான நைட் ட்ரெஸ் அணிந்து சமத்தாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டுள்ளார். குறித்த  புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement