• Sep 12 2025

முத்துவும் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தாரா.? உண்மையை உளறி வாங்கி கட்டிய மனோஜ்..

Aathira / 6 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  மகேஸ்வரி வீட்டுக்கு சென்ற முத்து க்ரிஷிடம் வீட்டுக்கு போகலாமா? என்று கேட்கின்றார். அதற்கு மகேஸ்வரி அவனுக்கு வர விருப்பம் இல்லை போல அவன் இங்கே இருக்கட்டும் என்று சொல்ல,  இல்ல  நான் உங்க கூட வாரேன் என்று க்ரிஷ் முத்து கூட செல்கின்றார் .

முத்துவும் மீனாவும் சென்ற பிறகு வெளியே வந்த ரோகிணி  மகேஸ்வரியிடம்  க்ரிஷ் விஷயம் பற்றி எதற்காக கேட்கவில்லை என்று வினாவுகின்றார். அதற்கு நீ உள்ளே போகும் போது உன்னுடைய ஹேண்ட் பேக்கை வைத்து விட்டு சென்று விட்டாய்.. அந்த டென்ஷனில் இருந்தேன்..  மீனா குடிக்க தண்ணீர் கேட்டும் கொடுக்கவில்லை என்று ரோகிணியை திட்டுகின்றார். 

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த மனோஜ், ரோகிணியிடம் இன்றைக்கு ஷோரூமில் ஒரு சம்பவம் நடந்தது , அதனை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்று எல்லோரையும் அழைக்கின்றார். இதன்போது க்ரிஷ் ஒரு பையனை அடித்து  இப்பவே ரவுடி ஆனதாகவும்,  முத்துவை பார்த்து தான் அவன் ரவுடியானதாகவும் மீண்டும் மீண்டும் சொல்லுகின்றார். 


விஜயாவும் முத்துவுக்கு எதிராக பேசுகிறார். ஒரு கட்டத்தில் நீயும் சீர்திருத்த பள்ளியில் தானே இருந்தாய் என்று முத்துவை பார்த்து மனோஜ் சொல்ல, முத்து  அவருக்கு அடிக்கச் செல்கின்றார். அதன் பின்பு  அண்ணாமலை  மனோஜ்க்கு அடிக்கின்றார்.  மேலும் விஜயாவுக்கும் திட்டிவிட்டு முத்துவிடம் மன்னிப்பு கேட்கின்றார். 

இறுதியில்  முத்துவின் கண்கள் கலங்கி அவர் மொட்டை மாடிக்கு சென்று விடுகின்றார். அங்கு சென்ற மீனா உங்களுடைய வாழ்க்கையில்  ஏதோ ஒன்று நடந்திருக்கிறது.  பெத்த அம்மாவுக்கு மகன் மீது பாசம் இல்லாமல் போகுமா?  உங்களுடைய சின்ன வயதில் என்ன நடந்தது என்று கேட்கின்றார்.  இதுதான் இன்றைய எபிசோட் .


  

Advertisement

Advertisement