தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டர்களுக்கு என்று பிரபலமானவர் நடிகர் ஆனந்த் ராஜ். இவருடைய நடிப்பில் வெளியான பாஷா, சூரியவம்சம், போக்கிரி போன்ற படங்கள் ரசிகர்களை மிரட்டச் செய்திருந்தன. அதன்பின்பு காமெடி, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.
தற்போது அறிமுக இயக்குனரான ஏ .எஸ் முகுந்தன் இயக்கத்தில் மதராஸ் மாபியா கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலமான சம்யுக்தா முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார்.
இந்த திரைப்படம் வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஆனந்த் பாபு, முனிஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஷகீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துச் சொல்லும் படமாக இது அமைந்துள்ளது.
இந்த நிலையில், மதராஸ் மாபியா கம்பெனி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படம் கூடிய விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த டீசரில் ஆனந்தராஜ் வில்லனாக மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இதில் சம்யுக்தா போலீஸ் கேரக்டரில் மிரட்டியுள்ளார் இந்த டீசரில் ஆனந்த்ராஜ் பேசிய வசனங்கள் வைரலாகி வருகின்றன.
Listen News!