• Jan 19 2025

விஷ்ணு விஷால் குடும்பத்தில் இருந்து திரைக்கு வரும் நபர் இவர்தான்.. டைட்டில் அறிவிப்பு..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

 தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலின் குடும்பத்தில் இருந்து இன்னொரு நபர் திரை உலகிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது முதல் படம் டைட்டில் மற்றும் பிற விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .  

கடந்த 2009 ஆம் ஆண்டு ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் திரையுலகத்திற்கு அறிமுகமான நிலையில், அதன்பின்னர் ’குள்ளரிக்கூட்டம்’ ’நீர் பறவை’ ’முண்டாசுப்பட்டி’ ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



இந்த நிலையில் ’மோகன்தாஸ்’  ’ஆர்யன்’ உட்பட சில படங்களில் விஷ்ணு விஷால் நடித்து வரும் நிலையில் தற்போது அவரது சகோதரர்  ருத்ரா என்பவர் தமிழ் திரை உலகில் அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’ஓஹோ எந்தன் பேபி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் இயக்க உள்ளதாகவும் இந்த படத்தை விஷ்ணு விஷாலின் சொந்த நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 
தர்புகா சிவா இசையில்  உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் படிப்படியாக அறிவிக்கப்படும் என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தனக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தது போல் தனது சகோதரருக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

Advertisement