• Nov 24 2024

விஜய்க்கு எதிராக திடீரென கைகோர்க்கும் விஷால் - அண்ணாமலை? 2026ல் இதுதான் திட்டமா?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்போது தான் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கிய நிலையில் விஜய்க்கு எதிராக விஷால் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைகோர்க்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் நடந்த கல்வி விருது விழாவில் பேசிய விஜய், மாநில அரசுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக அவர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதை அடுத்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்யப் போகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

முதல் விருது வழங்கும் விழாவில் போதைப் பொருள் அதிகரிப்பால் அச்சமாக இருக்கிறது என்று மாநில அரசை எதிர்த்து பேசிய விஜய், இரண்டாவது விருது வழங்கும் விழாவில் மத்திய அரசு எதிர்த்தும் மாநில அரசை ஆதரித்தும் பேசியதற்கு என்ன ரகசியம் என்று புரியாமல் அரசியல் விமர்சகர்களே குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் விஜய் மீது பாஜக அதிருப்தியில் இருப்பதாகவும் அவருக்கு எதிராகவும் அரசியல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் விஷால் பாஜகவுடன் கைகோர்த்துள்ளதாக தெரிகிறது.



2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வரப்போகிறேன் என விஷால் கூறி உள்ள நிலையில் அவர் பாஜகவில் சேர போவதாகவும் அதுமட்டுமின்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அடிக்கடி விஷால் - அண்ணாமலை ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருப்பதாகவும் பிரபல இயக்குனர் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னால் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கரூரில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அண்ணாமலை எப்படி கஷ்டப்பட்டு ஐபிஎஸ் படித்தார் என்று கதையம்சம் கொண்ட இந்த படம் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று விஷால் தரப்பினர் கூறி வருகின்றனர். விஜய் தனது அரசியலுக்கு எந்த இளைஞர்களை நம்பியுள்ளாரோ, அந்த இளைஞர்களை கவர்வதற்கு விஷால் - அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் விஜய்க்கு எதிராக விஷால் மற்றும் அண்ணாமலை அரசியல் செய்ய இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க விஜய் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement