சமீபத்தில் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தில் தன்னுடைய ’கண்மணி அன்போடு’ பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இன்னொரு மலையாள படமும் அதே பிரச்சனையை எதிர்நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ’குருவாயூர் அம்பலநடையில்’ என்ற படத்தில் ’உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் ’அழகிய லைலா’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டது. இந்த பாடல் மிகவும் சரியான இடங்களில் பயன்படுத்தப்பட்டதால் படத்திற்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட் ஆக இருந்த நிலையில் இந்த பாடலை கம்போஸ் செய்த இசையமைப்பாளர் சிற்பி சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னிடம் இந்த பாடலுக்காக படக்குழுவினர் அனுமதி கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
குருவாயூர் அம்பல நடையில் படத்தில் ’அழகிய லைலா’ பாடல் பயன்படுத்தப்பட்டதை பலர் எனக்கு போன் பண்ணி கூறினார்கள் என்றும் ஆனால் என்னிடம் படக்குழுவினர் யாரும் இது குறித்து பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் இந்த பாடலுக்கு உரிமையுள்ள நிறுவனத்திடம் அனுமதி வாங்கி தான் ’குருவாயூர் அம்பலநடையில்’ படக்குழுவினர் பயன்படுத்தியதாக எனக்கு தகவல் வந்ததாகவும் இருப்பினும் என்னுடைய பெயரை டைட்டிலில் போட்டு இருக்கலாம் என்றும் அவர்கள் அவ்வாறு செய்தார்களா எனக்கு தெரியவில்லை, நான் இன்னும் படம் பார்க்கவில்லை’ என்று கூறினார்.
எனக்கு பணம் எதுவும் தேவையில்லை, என்னுடைய பெயர் டைட்டில் போட்டால் மட்டும் போதும் என்று இசையமைப்பாளர் சிற்பி கூறியுள்ள நிலையில் இளையராஜா போல் அவர் எந்தவித சட்ட ரீதியாக நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்றும் தனது பெயர் மட்டும் போட்டால் போதும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஒருவேளை படக்குழுவினர் இதுவரை அவருடைய பெயரை டைட்டிலில் போடவில்லை என்றால் இனிமேலாவது போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!