• Sep 13 2024

'வைரலான மிரர் முத்தம்' இனி இந்த ஷோவுல எங்க பொண்ணு இருக்க வேண்டாம்; அவள வெளிய அனுப்புங்க! பிக்பாஸ் செட்டுக்கே சென்ற ஐஸ்வர்யாவின் பெற்றோர்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் நிக்சன் - ஐஸ்வர்யா ஜோடி செய்த லவ் சேட்டைகளை வெளியில் இருந்து பார்த்த ஐஸ்வர்யாவின் பெற்றோர் நேரடியாகவே பிக்பாஸ் செட்டுக்கு சென்று தம் மகளை வெளியே விடுமாறு கெஞ்சிக் கேட்டுள்ளனர்.

மேலும் தெரியவருகையில், பிக்பாஸ் சீசன் 7ல்  நிக்சனும் ஐஸ்வர்யாவும் கண்ணாடி வழியாக முத்தமிட்டுக் கொண்ட அந்தக் காட்சி ஐஸ்வர்யாவின் பெற்றோரை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் இரு தினங்களுக்கு முன் நேரடியாக பிக் பாஸ் செட்டுக்கே சென்றுவிட்டார்களாம்.


இதன்போது பேசிய அவர்கள், 'குடும்ப மானம் போகுது. இனி ஒரு நாள் கூட இந்த ஷோவுல எங்க பொண்ணு இருக்க வேண்டாம். தயவு செய்து அவள வெளிய அனுப்பிடுங்க' என நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களிடம் அழுகையும் ஆக்ரோஷமுமாக கேட்டுள்ளனர்.

எனினும் பிக்பாஸ் பொறுப்பாளர்கள் தரப்பில், 'எமர்ஜென்சியான காரணம் இல்லாம இப்படி திடீர்னு இங்க வந்து ஒரு போட்டியாளரைக் கூட்டிட்டுப் போக முடியாது. அதனால நீங்க கிளம்புங்க. நாங்க அவங்ககிட்டப் பேசறோம்'னு சேனல் தரப்புல அவர்களை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.


எனினும், அவற்றை கேட்காமல் தம் மகளை பார்த்து பேச வேண்டும் என அடம்பிடித்துள்ளனர். எனினும் ஒரு போட்டியாளருக்காக விதிமுறைகளை மீற முடியாது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கண்டிப்பாக சொல்லி அனுப்பி விட்டனர்.


Advertisement

Advertisement