• Dec 19 2025

நான் ரெடி தான் பாடலுக்கு அம்மாவும் பொண்ணும் சேர்ந்து போட்ட குத்தாட்டம்... 96 திரைப்பட நடிகையின் வைரல் வீடியோ இதோ...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

96 படத்தின் நடிகை தளபதி விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ”நா ரெடி தான் வரவா” பாட்டுக்கு தனது அம்மாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. 


சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கலக்கி வரும் நடிகை தேவதர்ஷினி சமீப காலமாக இந்தி படங்களில் அதிலும் சர்ச்சைக்குரிய படங்கள் மற்றும் வெப்சிரீஸ்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா படங்களில் காமெடி நடிகையாக மாறிய தேவதர்ஷினி சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.


மேலும் இந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்தில் நாயகி அதா சர்மாவின் அம்மாவாக நடித்திருந்தார். தேவதர்ஷினியின் கணவர் சேத்தன் விஜய்யின் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தில் மோசமான வில்லனாக நடித்து கதிகலங்க செய்திருந்தார்.


இந்த நட்சத்திர தம்பதியினரின் மூத்த மகளான நியதி விஜய்சேதுபதி மற்றும் திரிஷா நடித்த 96 படத்தில் அம்மா தேவதர்ஷினியின் பள்ளிப் பருவ கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காத நிலையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வருகிறார்.


இந்நிலையில், தற்போது தனது அம்மா தேவதர்ஷினியுடன் நடிகர் விஜய்யின் லியோ பாடலுக்கு இடுப்புத் தெரிய கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.


இதோ அந்த வீடியோ...  


Advertisement

Advertisement