பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். அப்படி தீவிரமாக கோவில் கட்டி கும்பிடும் ரசிகனை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் ரஜனிகாந்த். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளாக பயணிக்கிறார். மேலும் 170 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் தனது அபாரமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் தன்வசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் மதுரையில் உள்ள முன்னாள் ராணுவ வீரர், கார்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கோவில் அமைத்து, வழிபட்டு வருகின்றார். அவர்களை தனது இல்லத்திற்கு வரவழைத்து வாழ்த்தியுள்ளார் ரஜனிகாந்த்.
தனது வீட்டில் 300 கிலோ கருங்கல்லால் செதுக்கப்பட்ட 3.5 அடி உயர ரஜினிகாந்த் சிலை வைத்து கோவில் கட்டி வழிபட்டுவருகிறார். இப்படியான நிலையில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் தனது இல்லத்திற்கு வரவழைத்த ரஜினிகாந்த், அவர்களுடன் நீண்ட நேரம் பேசியுள்ளார். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் தனது இல்லத்தை சுற்றிக் காட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
Listen News!