தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க சென்ற 35 வயதுடைய பெண்ணொருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகனும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில், குறித்த சிறுவனை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் முடிவு செய்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனை பார்க்கக்கூடாது என்று போலீஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் வெளியாகி வைரலாகி உள்ளது.
d_i_a
அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா நடிப்பில் டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்தின் சிறப்பு காட்சி முதல் நாள் ஹைதராபாத் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட போது ரசிகர்களுடன் என்ஜாய் பண்ணுவதற்காக அல்லு அர்ஜுன் சென்றிருந்தார்.
இதன் போது அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடிய நிலையில், குறித்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்தார். அவருடைய மகனும் கூட்ட நெரிசலில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கும் சென்று மீண்டிருந்தார்.
இதை தொடர்ந்து சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆரம்பத்தில் 25 லட்சங்களை கொடுத்த அல்லு அர்ஜுன், அதற்குப் பிறகு தனது பட குழுவினருடன் இணைந்து மொத்தமாக 2 கோடி ரூபாயை இழப்பீடாக கொடுத்திருந்தார்.
எனினும் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று அல்லு அர்ஜுன் பால்கனியில் இருந்து புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்த்ததாகவும், பொலிஸார் வெளியே போகுமாறு அறிவுறுத்திய போதும் அவர் செல்ல மறுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்து காரில் ஏறி சீன் போட்டதாகவும் ப்ளூ சட்டை மாறன் சுட்டிக்காட்டி இருந்தார்.
இவ்வாறான நிலையிலையே தற்போது பாதிக்கப்பட்ட சிறுவனை அல்லு அர்ஜுன் பார்க்க சென்ற நிலையில், தெலுங்கு போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்து ஆபீஸியல் ரீதியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள்.
Listen News!