• Oct 16 2024

திடீரென மணி மீது புகார் கொடுத்த விக்ரம்! இது வழக்கே இல்லையென நோஸ் கட் பண்ணியனுப்பிய பிக்பாஸ் தலைவர்? வைரலாகும் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 ஆனது தற்பொழுது தான் சூடு பிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் மணிமீது புகார் அளித்த விக்ரமின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. .

அதில் இன்றைய தினம் பிபி கோட்ஸ் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொரு வாதங்களை முன் வைத்து அதற்கான காரணங்களை எடுத்துக் கூறி வாதாடி வருகின்றனர்.


இந்த நிலையில், மணி மீது புகார் கொடுத்துள்ளார் விக்ரம்.  அவர் கூறுகையில், 'யுகேந்திரன் சார் கேப்டனாக இருக்கும் போது ஒரு டாஸ்க் நடைபெற்றது. அதில் எமக்கு நியாயம் கிடைக்கும் வரை யாருக்கும் சேவை செய்ய கூடாது என்ற முடிவில் இருந்தோம். அந்த நேரத்தில் மணி தண்ணி கேட்டார். ஆனாலும் நான் கொடுக்கவில்லை. அதன்பின் அவர் என்னை பழிவாங்க வேண்டும் என்றால் எனக்கு தண்ணி தராமல் இருந்து இருக்கலாம். இல்லை வேறு ஏதும் செய்து இருக்கலாம். ஆனால் அவர் என் நெஞ்சில் தாக்கி விட்டார். அது இன்னும் எனக்கு மாறவில்லை' என விக்ரம் சொல்கிறார்.

இத கேட்ட பிக் பாஸ் தலைவர். உங்கள் வழக்கு எனக்கு புரியவில்லை, என்னை கேட்டால் இது வழக்கே இல்லை என சொல்லி முடித்துள்ளார். இது விக்ரமுக்கு பெரும் அதிர்ச்சியாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 

Advertisement