• Dec 05 2023

இந்த ஐஷூ எங்களுக்கு வேண்டாம்! ஐஷூவின் தாயார் கண்ணீருடன் பகிந்த பதிவு!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

பிக் பாஸ் வீட்டில் நிக்சன் - ஐஸ்வர்யா ஜோடி செய்த லவ் சேட்டைகளை வெளியில் இருந்து பார்த்த ஐஸ்வர்யாவின் பெற்றோர் நேரடியாகவே பிக்பாஸ் செட்டுக்கு சென்று தம் மகளை வெளியே விடுமாறு கெஞ்சிக் கேட்டமை தொடர்பில் சினிசமூகம் தளத்தில் ஏற்கனவே பதிவிட்டு இருந்தோம்.

இந்த நிலையில், ஐஷூவின் தாயார் தன்  மகள் தொடர்பில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


பிக்பாஸ் சீசன் 7ல்  நிக்சனும் ஐஸ்வர்யாவும் கண்ணாடி வழியாக முத்தமிட்டுக் கொண்ட அந்தக் காட்சி ஐஸ்வர்யாவின் பெற்றோரை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் நேரடியாகவே பிக் பாஸ் வீட்டிற்கு சென்று தம் பிள்ளையை வெளியே விடுமாறு கேட்டு இருந்தனர்.

எனினும், 'எமர்ஜென்சியான காரணம் இல்லாம இப்படி திடீர்னு இங்க வந்து ஒரு போட்டியாளரைக் கூட்டிட்டுப் போக முடியாது. அதனால நீங்க கிளம்புங்க. நாங்க அவங்ககிட்டப் பேசறோம்னு' சேனல் தரப்புல அவர்களை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.


இவ்வாறான நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஐஷூவை பார்த்த தாயார் அவருக்காக பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

அதன்படி குறித்த பதிவில், 'எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு ஐஷூ. இந்த ஐஷூ வேண்டாம், நாங்கள் எங்களுடைய ஐஷூவை பார்க்க விரும்புகிறோம். உண்மையான கண்கள் எது, உண்மையான பொய் எது என நீ உணர்வாய் என நம்புகிறேன்' என பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement