காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் KPY பாலா. இவர் சின்னத்திரையில் தனது காமெடி மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்பு தனது விடாமுயற்சியினால் இன்று வெள்ளித்திரையில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், KPY பாலா செய்த உதவி எல்லாமே ஸ்கேம் தான் என பிரபல பத்திரிக்கையாளர் உமாபதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,
பாலா செய்ற உதவி எல்லாமே பித்தலாட்டம். அவர் கொடுக்கும் ஆம்புலன்ஸ் வண்டி எல்லாம் போலி. அதோட நம்பர் எல்லாம் வேறு ஏதோ வாகனத்தோட நம்பர் தான். அவனுக்கு எப்படி இவ்வளவு காசு வருகின்றது.. அவனை மிகப்பெரிய சர்வதேச தீய கும்பல் இயக்குகின்றது.. பாலா போன்றவர்களை பல மாநிலங்களிலும் உருவாக்கி மக்கள் மனதில் இடம் பிடிக்க வைத்து அவர்களை வைத்தே ஒரு ஆட்சியை கலைக்கும் அளவுக்கு சக்தியாக மாற்றுகின்றார்கள்.
இந்த தேசத்திற்கு ஆபத்தை விளைவைக்கக்கூடிய நம்பர் ஒன் நபர் என்றால் அது பாலா தான். இன்றைய சூழலில் சர்வதேச அரசியலுடன் முடிச்சு போடக்கூடிய அதிபயங்கரமான ஆள்.. ஏழை குடும்பத்தில் பிறந்த இவர், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு விஜய் டிவிக்கு வந்தார். ஆனால் இன்று தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆபத்தை உருவாக்குபவராக உருவெடுத்துள்ளார்.
ஒரு ஏழை வீட்டுப் பையன் தனக்கு வரும் சொற்ப வருமானத்தில் மற்றவர்களுக்கு உதவுகின்றாரே என்று பாலா மீது கவனம் குவியும். சென்டிமென்ட் இங்கே எடுபடும். ஆனால் பாலா எப்படி சம்பாதிக்கின்றார் என்று யாருக்குமே தெரியாது.
விஜய் டிவியில் 25000க்கு மேல் தர மாட்டார்கள். அப்படி இருக்கும் போது இவர் எப்படி பிறருக்கு வீடு கட்டிக் கொடுக்க முடியும்? ஆம்புலன்ஸ் கதைகள் எல்லாமே போலி. பாலா நல்லவர்தான். ஆனால் தீய சக்திகள் அவரை தங்களுக்கேற்றவாறு மாற்றிக் கொண்டுள்ளனர். இவருடைய வருமானத்தில் எப்படி ஆஸ்பத்திரி எல்லாம் கட்ட முடியும்? அதற்கு எவ்வளவு செலவாகும்? என்று தனது சந்தேகத்தை தெரிவித்துள்ளார் உமாபதி.
Listen News!