• Oct 30 2024

அடுத்தவர் காசில் புகழை தேடும் விஜய்.! அவரில் கருணாநிதியின் சாணக்கியத்தனம் தெரிகிறது! சர்ச்சையை கிளப்பிய பயில்வான்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமான மக்களும் விரும்புகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டுமென்றால் அவருடைய சொந்த பணத்தில் தான் ஆக வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான லியோ திரைப்படம் வசூலில் மிகப் பெரிய சாதனையை படைத்துவருகின்றது.



மேலும், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த பல வருடங்களாகவே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனினும் அதுகுறித்து விஜய் மௌனமாக இருக்கின்றார்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், 'விஜய்தான் சோறு, மோர் எல்லாம் கொடுக்க வேண்டும். இரவு படிப்பகத்தை திறக்க வேண்டும். உங்களுடைய காசில் உங்கள் புகழை தேட வேண்டும். அடுத்தவர் காசில் ஏன் புகழை தேட வேண்டும். விஜய் முதலமைச்சராக வேண்டுமென்றால் அவர்தான் பணத்தை செலவு செய்து. அவரது பணத்தில் முதலமைச்சராக வேண்டும். அதில் தவறு இல்லை. எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லாம் விஜய்க்கு வாக்கு செலுத்தமாட்டார்கள். விஜய் இன்னும் பக்குவம் அடையவில்லை. பத்திரிகையாளர்களிடம் பேச பயப்படுகிறார் விஜய். சமீபத்தில் நடந்தது லியோ வெற்றி விழா எல்லாம் இல்லை. அந்த விழாவில் அவரது பேச்சு அரசியல்வாதியின் முன்னோட்ட பேச்சாகத்தான் இருந்தது.தோல்வியை ஒத்துக்கொள்கிற கலைஞர் கருணாநிதியின் சாணக்கியத்தனம் அதில் தெரிந்தது. விஜய் அரசியலுக்கு வரும் ஆசையில்தான் இருக்கிறார்' என்றார்.    

Advertisement