• Jan 09 2026

TVK பொறுப்பை ஒப்படைத்த விஜய்! வாழ்வில் மறக்க முடியாது! ராப் பாடகர் அறிவு நெகிழ்ச்சி!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கோலாகலமாக நடைபெற்றது. 2 லட்சம் தொண்டர்கள் வரை இந்த மாநாட்டில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மாநாட்டில் பேசிய விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல்திட்டங்கள், அரசியல் இலக்கு குறித்து பேசினார். 



தவெக மாநாட்டில் கட்சியில் கொள்கை பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. வெற்றி வெற்றி என தொடங்கும் இந்த பாடல் கட்சியின் கொள்கை விளக்கும் வகையில் அமைந்தது. ராப் பாடகர் அறிவு இந்த பாடலை இயற்றியுள்ளார்.
d_i_a

ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் 'வாத்தி ரைடு' அறிவு பாடியிருந்தார். தவெகவின் கொள்கைப்பாடலை இயற்றியது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவு பதிவிட்டுள்ளார்.



அதில்ஜய் அண்ணாவிடம் ஏன் என்னை தேர்வு செய்தீர்கள் என்று தான் கேட்டதாகவும் 'உன்னால மட்டும்தான் இத பண்ண முடியும் ' என்று விஜய் பதிலளித்துள்ளதாக அறிவு பதிவிட்டுள்ளார். இந்த வாய்ப்பை தனக்கு கொடுத்ததற்கு விஜய்க்கு நன்றி தெரிவித்த அறிவு  விஜயின் குரலை பதிவு செய்தது தான் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவு என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement